ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பெட்ரோல் குண்டு வீசப்படுவது தான் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா? காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.