மீண்டும் மீண்டுமா? பாக்கியலட்சுமி சீரியலில் அரைத்த மாவை அரைக்கும் இயக்குனர்… கோபி கொடுத்த க்ளூவ்
CineReporters Tamil February 04, 2025 12:48 AM

Bakkiyalakshmi: பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து நடக்க இருக்கும் எபிசோடுகளின் சுவாரசிய தகவலை அந்த தொடரில் கோபியாக நடிக்கும் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முக்கியமானது பாக்கியலட்சுமி. இத்தொடர் குடும்பப் பெண்ணாக இருக்கும் ஒரு மனைவி எப்படி வாழ்க்கையில் செய்கிறார் என முதலில் கூறப்பட்டது. பாக்கியா என்னும் கேரக்டர் வீட்டில் அடக்கி ஒடுக்கப்பட்டிருந்தது.

அவர் தன்னிடம் இருக்கும் திறமையை புரிந்து கொண்டு வாழ்க்கையின் படிப்படியாக முன்னேறுவதை நான் காட்டுவார்கள் என முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது இக்கதை இரண்டு மனைவிகள் கதை தான் அதிகமாக காட்டப்படுகிறது. இவரின் கணவர் கோபி தற்போது இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

அவர்கள் வெளியில் துரத்தப்படுவதும் மீண்டும் பாக்கியாவின் வீட்டிலேயே இரண்டு மனைவிகளுடன் கோபி இருப்பதும் என காட்சிகள் தொடர்ந்து இதை காட்டப்பட்டு வந்தது. சமீபத்தில் இதில் புது மாற்றம் எனக் கூறப்பட்டு கோபிக்கு திடீரென நெஞ்சுவலி அவருக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அவர் அந்த காட்சி முடிந்த சில எபிசோடுகளில் மீண்டும் வாக்கிங் செல்ல தொடங்கினார். இரண்டாவது மனைவியை மீண்டும் பழைய மாவை அரைப்பது போல் பாக்கியா வீட்டிற்கு அழைத்து வந்து அவரையும் ஒன்றாக தங்க வைத்தார். அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டதில் மீண்டும் ராதிகா வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

இந்நிலையில் கோபி தன்னையும் பாக்கியா எப்படியும் வெளியில் போக சொல்லுவார். நண்பர் செந்தில் வீட்டிற்கு போகலாமா இல்லை நமக்கே இருக்கு ஈஸ்வரிக்கு சென்று விடலாமா எனக் யோசிக்கும்படி ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இன்றைய எபிசோடு ராதிகாவை நேரில் சந்திக்கும் பாக்கியா அவரை சமாதானப்படுத்தி மீண்டும் பழைய மாவை அரைப்பது போல் வீட்டிற்குள் அழைத்து வருவாரா? இல்லை முன்னாள் கணவரின் வாழ்க்கையை சரிசெய்ய வீட்டை விட்டு அனுப்பி ராதிகாவுடன் சேர்த்து வைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.