ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் காவல் நிலையம் உள்ளது. இங்கு நள்ளிரவு பைக்கில் வந்த இருவர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றனர். மர்ம நபர்கள் இருவர் பைக்கில் வந்து போலீஸ் ஸ்டேஷனில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ஹரி என்பவர் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்த நிலையில் அவரை காவல்துறையினர் பிடிப்பதற்காக சென்றனர். அப்போது உதவி ஆய்வாளர் ஒருவரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றதால் அவரை போலீசார் சுட்டு பிடித்தனர். மேலும் அவருக்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.