உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள பிரக்யாராஜில் மகா கும்பமேளா வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. கடந்த 15-ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகின்ற 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கடந்த மாதம் 29 மவுனி அம்மாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. ஆனால் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மறைப்பதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அங்கு உயிரிழந்தவர்களின் உடல்களை ஆற்றில் வீசப்பட்டதால் மாசுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் எந்த வசதியும் இல்லாத நிகழ்ச்சியில் பலர் புனித நீராடி விட்டு சென்று வருகின்றனர் என்று பொய் கூறுகின்றனர். மேலும் இவ்விடத்தில் இவ்வளவு மக்கள் எவ்வாறு கூட முடியும் என்றும் எம். பி ஜெயா பச்சன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் எப்படி அந்த இடத்தில் கூட முடியும் இவ்வாறு அவர் கூறினார். மேலும் மவுனி அம்மாவாசை ஒட்டி 5 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியதாக உத்திரப்பிரதேச அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.