துண்டு பிரசுரம் விநியோகம் செய்த பாஜக நிர்வாகி கைது.!
Tamilspark Tamil February 04, 2025 05:48 AM

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில், முருகன் கோவிலுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் கந்தூரி கொடுக்க முயன்ற விவகாரத்தில், இந்து அமைப்புகள் - இஸ்லாமிய அமைப்புகள் இடையே கருத்து ரீதியிலான முரண் இருந்து வருகிறது.

இதனால் இந்து - இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இதனால் மதுரை மற்றும் திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், போராட்டம் மற்றும் பிற அசம்பாவிதத்தை தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

துண்டு பிரசுரம் விநியோகம்

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெருமாள்பட்டி பகுதியில், பாஜக பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் பிரபாகரன் (56) என்பவர், திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும் என துண்டு பிரசுரம் விநியோகம் செய்துள்ளார்.

இதனால் தகவல் அறிந்த ஸ்ரீவி நகர காவல்துறையினர், விரைந்து சென்று பிரபாகரனை கைது செய்தனர். மேலும், அவர் கைத்தனத்தை அறிந்த இந்து அமைப்பினர், ஸ்ரீவி நகர காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு உண்டாகியது.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.