ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதி திராவிடர் மாணவர்களின் கல்விக் கடன்களை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.48.95 கோடி கல்விக் கடனை தள்ளுபடி செய்வதாக அரசாணையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1972 முதல் 2019 வரை மருத்துவம் மற்றும் அது சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்கள் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
நிலுவைத் தொகையை மாணவர்களிடமிருந்து வசூலிக்க முடியாததால் இந்தக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
பதிவேடுகள் இல்லாததால் கடன் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண முடியவில்லை என்ற காரணத்தினாலும் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.