செல்போன் பறிப்பு: மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்த சென்னை பத்திரிகையாளர் மன்றம்!
Seithipunal Tamil February 04, 2025 03:48 AM

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில்   முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு எதிராக, சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசனை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.

மனுவை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் உறுதியளித்து உள்ளதாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினராக இருக்கும் கண்ணதாசன் முன்னாள் திமுக செய்தி தொடர்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்தில், சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), சட்டத்திற்கு புறம்பாக பத்திரிகையாளர்களிடம் விசாரணை நடத்துவது மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்வதை கண்டித்து மன்றம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.