திருப்பரங்குன்றம் மலை விவகாரம் காரணமாக, மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக காவல்துறைக்கு பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "சட்ட விரோதமாக திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரமித்து கொண்டு, அத்துமீற துடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை,
சட்ட ரீதியான உரிமையை நிலைநாட்ட, அராஜக மத அடிப்படைவாதத்தை எதிர்க்கும் ஹிந்து மக்களை கைது செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஹிந்து மக்களின் புனிதமான அறுபடை வீடுகளில் முதன்மையான முருகப்பெருமானின் இருப்பிடத்தில் கலகம் செய்ய முயற்சிப்பவர்களை கைது செய்யாத காவல் துறை,
உரிமைக்காக போராடும் ஹிந்து மக்களின் மீது நடவடிக்கை ஈடுபட்டு உலகத்திலேயே எங்கும் நடக்காத ஒன்று" என்று தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.