திருச்சியில் பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பாராட்டிய அவர் பள்ளிக்கல்வித்துறை அவருடைய தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் செயல்படுகிறது என்று கூறினார்.
அதன்பிறகு தமிழ்நாடு சாரணர் இயக்கத்திற்கான புதிய தலைமை அலுவலகம் 10 கோடி செலவில் அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். அதன்படி புதிய தலைமை அலுவலகம் நவீன பயிற்சி வசதிகளோடு அமைக்கப்படும் என்று கூறினார். மேலும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பாராட்டுவதற்கு இந்த ஒரு நிகழ்ச்சி போதாது என்றும் கூறினார்.