திருச்சியில் நடைபெற்ற பாரத சாரண சாரணியர் வைர விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது சாரணர் இயக்கத்திற்கு புதிய தலைமை அலுவலகம் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும் என்று முதல்வர் உறுதி கொடுத்தார். அதன் பிறகு பேசிய முதல்வர் இந்தியா முழுவதும் சுமார் 80 லட்சம் மாணவ மாணவிகள் சாரணர் இயக்கத்தில் இருக்கிறார்கள் என்றார். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 12 லட்சம் என்றார். இந்த விழாவில் இறுதியில் முதல்வர் ஸ்டாலின் மாணவ மாணவிகளுடன் செல்பி எடுத்துக் கொண்ட நிலையில் அந்த புகைப்படத்தை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜய் பொதுவாக ரசிகர்களை சந்திக்கும் போது மற்றும் முதல் மாநாட்டின் போது செல்பி எடுத்துக் கொண்டு அந்த போட்டோவினை வெளியிட்டு இருந்தார். சமீபத்தில் கூட அவருடைய ஜனநாயகன் படத்தின் முதல் போஸ்டர் வெளியான போது அதில் செல்பி எடுப்பது போன்று தான் இருந்தது. தற்போது அந்த படத்தையும் முதல்வரின் படத்தையும் பகிர்ந்து முதலில் விஜய் செய்தார் இரண்டாவது அதை பார்த்து முதல்வர் ஸ்டாலின் செய்கிறார் என்று பதிவிட்டுள்ளனர். மேலும் இன்று தொண்டர்களுக்காக விஜய் ஒரு கடிதம் எழுதிய நிலையில் அதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினும் கடிதம் எழுதினார். இதையும் ஒற்றுமைப்படுத்தி வைரலாக்கிய நிலையில் தற்போது இந்த போட்டோவையும் வைரலாக்கி வருகிறார்கள்.
View this post on Instagram