உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள புனாவலி காலா கிராமத்தில் வசிப்பவர் உத்தம் ராஜ்புத் (45). அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. அவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். சம்பவம் நடந்த நாளில், குளத்தின் அருகே தனது நான்கு நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, குளத்தில் நீந்தி மறுபுறம் சென்றால் ரூ.100 தருவதாக உத்தம் ராஜ்புத்திடம் ஒரு நண்பர் பந்தயம் கட்டினார்.
உத்தம் ராஜ்புத் பந்தயத்திற்கு ஒப்புக்கொண்டு குளத்தில் குதித்து நீந்த முயன்றார். இருப்பினும், அவரது போதையில், அவர் குளத்தின் ஆழத்தில் சிக்கி சிரமப்பட்டார். இதைக் கண்ட அவரது நான்கு நண்பர்கள் அவருக்கு உதவுவதற்குப் பதிலாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன் பிறகு, குளத்தின் வழியாகச் சென்ற சில கிராம மக்கள் உத்தம் ராஜ்புத் குளத்தில் தத்தளிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் குளத்தில் இறங்கி அவரை வெளியே எடுத்தனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து அறிந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் விசாரணை நடத்தி, பந்தயத்தில் ஈடுபட்ட உத்தமின் நண்பர்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.