திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த சேக்மைதீன் என்பவரின் மகன் முகமது ஜபருல்லா (18). திருவெறும்பூர் அரசு ஐடிஐயில் ஃபிட்டர் முதலாமாண்டு படித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு, அவருக்கும் அதே ஐடிஐயில் சிஎன்சி முதலாமாண்டு மாணவரான சுந்தரமூர்த்தியின் மகன் நிதிஷ் குமார் (18) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், முகமது ஜபருல்லாவுக்கும் நிதிஷ் குமாருக்கும் இடையே முன்பகை உள்ளது.
இந்த நிலையில், நேற்று, வகுப்பறையில் முகமது ஜபருல்லா மேசையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, முகமது ஜபருல்லாவை முதுகில் கத்தியால் குத்திவிட்டு நிதிஷ் குமார் தப்பி ஓடிவிட்டார். இதில் காயமடைந்த முகமது ஜபருல்லாவை சக மாணவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். திருவெறும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.