19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக கோப்பையை இந்திய மகளிர் அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.
மலேசியாவில் நடைபெறும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், 20 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி வீராங்கனைகள், இந்திய ஸ்பின்னர்களின் நேர்த்தியான பந்து வீச்சால் நிலைகுலைந்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
குறிப்பாக, இந்திய அணியின் கொங்கடி த்ரிஷா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து 83 ரன்கள் அடித்தல் வெற்றியுடன் உலக்கோப்பையும் வெல்லலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 11.2 ஓவர்களில், ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து, 84 ரன்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளது.
அதிகபட்சமாக இந்திய வீராங்கனை கொங்கடி திரிஷா 44 ரன்களும், சனிகா சால்கே 26 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழி வகுத்துள்ளனர்.