தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கடந்த ஜனவரி 24ஆம் தேதி முதல் கட்சி மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமிக்க உத்தரவிட்டார். அதன்படி பனையூரில் கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் கட்சி அலுவலகத்திற்கு வந்த விஜயை பார்ப்பதற்காக ஜப்பானிலிருந்து ரசிகர்கள் காத்திருந்துள்ளனர்.
விஜயை பார்த்ததும் அதிர்ச்சியில் நகராமல் நின்ற ஜப்பான் ரசிகை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தன்னைக் காண வந்த ஜப்பான் ரசிகர்களுக்கு கட்சி அலுவலகத்தில் வைத்து சால்வை அணிவித்து மரியாதை செய்தார் தலைவர் விஜய். இதற்கு ரசிகர்கள் பலரும் இனி ஜப்பானிலும் TVK கொடி பறக்க போகிறது என பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram