காரை கழுவிய மெக்கானிக்…. மின்சாரம் தாக்கி தூக்கி வீசியதில் உயிரிழப்பு…. கலங்கவைக்கும் வீடியோ…!!!
SeithiSolai Tamil February 02, 2025 11:48 PM

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள பகுதியில் கோதண்டராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கார் கேரேஜ் ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் அந்த கேரேஜில் குடியாத்தம் தாங்கல் பகுதியில் வசிக்கும் சுதாகர்(24) என்பவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று தனது கடைக்கு வந்த காரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் காரை நீரைக் கொண்டு கழுவ முயன்ற போது, திடீரென அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் நிலைகுலைந்த அவர் தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அவருடன் பணியாற்றியவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.