செய்தியாளர்கள் சந்திப்பின் பொது திமுக வேட்பாளர் சந்திரகுமார் இந்தியும், தமிழும் தான் எங்கள் உயிர் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக நாம் தமிழர் வேட்பாளர் கட்சியின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் ஹிந்தியில் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரித்ததாக சர்ச்சை எழுந்தநிலையி குறித்து விளக்கம் அளித்த போது திமுக வேட்பாளர் சந்திரகுமார் இந்தியும், தமிழும் தான் எங்கள் உயிர் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனை பக்கத்தில் இருந்தவர்கள் எச்சரித்ததை எடுத்து மாற்றி சொல்லிவிட்டேன் தமிழும் ஆங்கிலமும் தான் எங்கள் உயிர் என்று கூறி சமாளித்துள்ளார்.
தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்ப்பதாக கூறிவரும் திமுக ஹிந்தியில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரிப்பதாக புகார் எழுந்தது. சமூக வலைதளங்களில் வெளியான துண்டு பிரச்சாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேட்பாளர், சந்திரகுமார் ஆகியோருடைய படங்கள் இடம்பெற்று இருந்தது. இந்தி திணிப்பை எதிர்ப்பதாக கூறும் திமுக ஹிந்தியில் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பதாக நாதக கட்சியினர் விமர்சித்தார்கள்.
இது குறித்து திமுக வேட்பாளர் சந்திரகுமார் விளக்கம் அளித்தபோது, திமுக சார்பாக இந்தியில் நோட்டீஸ் அச்சடித்து வழங்கப்படவில்லை. வட இந்திய வாக்காளர்களுக்கு புரிவதற்காகத் தான் லக்கி கோத்தாரி என்பவர் தனிப்பட்ட முறையில் இந்தியில் நோட்டீஸ் அடித்து வழங்கினார். அவர் நீண்ட காலமாக மக்களுக்கு நன்கு பரீட்சியமானவர் என்றும் விளக்கம் அளித்திருந்தார். இருமொழிக் கொள்கையில் திமுக அரசு உறுதியாக இருக்கிறது. இந்தியும் தமிழும் தான் எங்கள் உயிர் என்று கூறியதால் அருகில் இருந்தவர்கள் உஷார் படுத்த சுதாரித்துக் கொண்டு தமிழும் ஆங்கிலமும் தான் என்று கூறி சமாளித்தார்.