ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இப்படியான நிலையில் நாளையுடன் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓடுகின்றது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.
இந்த நிலையில் நேற்று பிரச்சார கூட்டத்தில் பேசிய சீமான், ஒரே நாளில் ஒன்னு இல்ல ரெண்டு இல்ல 100 வழக்குகளை வாங்கியவன் நான் மட்டும்தான். உங்கள மாதிரி கொள்ளை அடிச்சு ஊரான் சொத்தை வித்து உலையில போட்டு சேர்த்ததல்ல என்னுடைய சொத்து. என்னுடைய மக்களுக்காக நான் போராடியதால் வந்த வழக்கு உண்மையிலேயே பெரியாருடைய ஆதரவாளர்கள் என்னிடம் மண்டியிட்டு பொது மன்னிப்பு கேட்டு ஆகத்தான் வேண்டும். வரலாற்றிலேயே முதல் முறையாக தற்போது தான் உண்மையான எதிரியை நேருக்கு நேர் சந்திக்கிறீர்கள். தமிழினத்திடம் உங்களுடைய தத்துவம் கட்டாயம் சரணடைந்து சாக வேண்டும் என்ற சீமான் ஆவேசமாக பேசியுள்ளார்.