Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட்களுக்கான புரோமோ வெளியாகி இருக்கிறது.
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி விஜயாவை சந்தித்து உங்க மருமக பெரிய ஆர்டரா எடுத்து இருக்கா? அவளை நீங்க மண்டபத்துக்கு போக விடாமல் செஞ்சா போதும் என்கிறார். அதுபோல விஜயா கை உடைந்தது போல நடித்து சத்தம் போட மீனா வருகிறார்.
கையில் அடிப்பட்டு விட்டதாக கூறி மீனாவை வேலை வாங்கிக்கொண்டே இருக்கிறார். அவரும் அத்தை என்பதற்காக அவர் கேட்பதை எல்லாம் செய்துக்கொண்டு இருக்கிறார். இருந்தும் தன்னுடைய ஆர்டரை போனில் வீடியோ கால் செய்தே செய்து விடுகிறார்.
பின்னர் வீட்டிற்கு வரும் முத்து மீனாவுக்கு மாலை போட அவர் சந்தோஷமாகி விடுகிறார். அண்ணாமலை என்னவென்று கேட்க மீனா மண்டபத்துக்கே போகாமல் டெக்கரேஷன் ஆர்டரை முடித்துவிட்டதாக சொல்கிறார். இதை கேட்டு விஜயா ஷாக்காகி விடுகிறார்.
பாக்கியலட்சுமி: ராதிகா வீட்டை விட்டு மயூவை அழைத்துக்கொண்டு சென்று விட ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார். இருந்தும் அவரை சமாதானம் செய்ய கோபி அவரை பார்க்க சென்றும் ராதிகா அவருடன் செல்ல மறுத்துவிடுகிறார். இதில் கோபி கலங்கி போய் வீட்டிற்கு வருகிறார்.
அவரை உட்கார வைத்து பேசும் ஈஸ்வரி உன்ன வேண்டாம்னு போனவளை நீ ஏன் நினைக்கிற? மறந்துரு. குழந்தைகளுக்காக இரு என்கிறார். ஆனால் கோபி தன்னால் ராதிகா மற்றும் மயூ இல்லாமல் இருக்க முடியாது எனப் பேசி கவலையாக இருக்கிறார்.
அவர்களுக்காக கோபி கண்ணீர் விட உனக்கு அவங்க வேண்டாம். நாங்க இருக்கோம். அவங்களை மறந்துடு பாதியிலே வந்தவங்க. பாதிலேயே போகட்டும் என்கிறார். இந்த வாரம் பெரிய அளவில் காட்சிகள் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.