விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு விக்ரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட உள்ளது. அதற்கான பணிகளில் விஜய் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளராக இருந்த நிர்மல் குமாரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். நிர்மல் குமாருக்கு தகவல் தொழில்நுட்பம் சமூக ஊடகப் பிரிவின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜூனாவிற்கு தேர்தல் பிரச்சாரம் மேலாண்மை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழக முதல் மாநாட்டிற்கு பிறகு அரசியல் வட்டாரத்தில் கடும் போட்டி நிலவுகிறது. அப்படி இருக்க ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் போன்ற முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததால் தமிழக முதல்வருக்கு இனிமேல் தூக்கம் வராது என கலாய்க்கும் விதமாக சோசியல் மீடியாவில் ஒரு பதிவு உலா வருகிறது. இதோ அந்த பதிவு..