தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களின் சிலையை நடிகர் விஜய் திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தலைவர் விஜய் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்தார். பின்னர் தவெகவின் இரண்டாம் ஆண்டு விழாவையொட்டி கட்சி அலுவலகத்தில் கொள்கை தலைவர்கள் சிலையை தலைவர் விஜய் திறந்து வைத்தார். வேலு நாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலையம்மாள் சிலைகள் திறக்கப்பட்டுள்ளது. பின்னர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.