என்னிடம் பெரியார் ஆதரவாளர்கள் தான் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் ஆவேசமாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பரப்புரையானது தீவிரமாக நடந்து வருகிறது. வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்ற நிலையில்திமுக, நாதக உள்ளிட்ட அரசியல் கட்சியின் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் நாதக கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டம் மூலமாகவும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில் சீமான் பேசுகையில், “இந்தியாவிலேயே ஒரே நாளில் நூறு வழக்குகளை வாங்கியவன் நான். பெரியாரை இழிவுபடுத்தி விட்டதாக என்மீது வழக்கு போட்டார்கள். ஆனால் 60 ஆண்டுகளாக தமிழின மக்களை பெரிய தான் இழிவு படுத்தி விட்டார். அட பைத்தியக்காரங்களுக்கு பிறந்த பைத்தியக்காரர்களா நீங்க தான் என்னிடம் மண்டியிட்டு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.
என்னிடம் பெரியார் ஆதரவாளர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். உண்மையிலே நீங்கள் தான் மண்டியிட்டு என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தம்பி மறுபடியும் மறுபடியும் சொல்றேன் வரலாற்றிலேயே நீ முதன்முதலா ஒரு எதிரியை சந்திக்கிற . தமிழ் இனத்திடம் பெரியார் தத்துவம் சரணடைந்து சாக வேண்டும். வேறு வழியில்லை” என்று பேசியுள்ளார். சீமான் பெரியார் ஆதரவாளர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.