பாஜகவினுடைய பி டீம் நாம் தமிழர் கட்சி என்றால் பாஜகவின் ஏ டீஎம் திமுக தான் என்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பரப்புரையில் சீமான் ஆவேசமாக பேசியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5ஆம் தேதி நடக்க உள்ளது. இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பரப்பரையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் பரப்புரையில் ஈடுபட்ட சீமான், “தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பவர்கள் எப்படியாவது மக்களை ஏமாற்ற வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்கள். வாக்கினை பெறுவது வேறு . வாக்கினை வெல்வது வேறு.
வாக்கை வெல்வது என்பது பணத்தை கொடுத்து வாங்குவது தான். 60 ஆண்டு கால திராவிடர்களின் ஆட்சியில் லட்சியம் என்னவென்றால் ஆயிரம் ரூபாய்க்கு என் அம்மாவும் தங்கையும் கையேந்துவது தானா ?இதுதான் நவீன தமிழ்நாட்டில் வருகிறது. ஆயிரம் ரூபாய்க்கு கையேந்தினால் புரட்சி. இல்லாவிட்டால் வறட்சி இப்படி ஒரு அரசியல் கட்சியை துரத்திவிட்டு மக்களுக்கான அரசியலை கொண்டு வர தான் நாதக போராடுகிறது. நாம் தமிழர் கட்சி என்னை பாஜகவின் பீ டீம் என்று சொல்கிறார்கள். பாஜகவின் பீ டீம் நாம் தமிழர் கட்சி என்றால், திமுக பாஜகவின் ஏ டீம்” என்று பேசி உள்ளார்.