தேனி மாவட்டத்தில் உள்ள கதிர் நரசிங்கபுரத்தில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌமியா(24) என்ற மகள் இருந்துள்ளார். பி.எட் படித்து முடித்த சௌமியாவுக்கு பாலாஜி என்பவருடம் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டது. ஆனால் சௌமியா திருமணம் செய்வதில் விருப்பமில்லாமல் இருந்தார். ஜனவரி 31ஆம் தேதி சௌமியாவுக்கு திருமணம் நடந்து முடிந்தது. பால், பழம் கொடுப்பதற்காக புதுமண தம்பதியை கதர் நரசிங்கபுரத்திற்கு அழைத்து சென்றனர்.
அப்போது படுக்கை அறைக்கு சென்ற சௌமியா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் சௌமியா வெளியே வராததால் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சௌமியா தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சௌமியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.