சிறுவனின் சட்டையில் “ரத்தக்கரை”…. மகன் சொன்னதை கேட்டு ஷாக்கான தாய்…. பகீர் பின்னணி…!!
SeithiSolai Tamil February 02, 2025 01:48 PM

சேலம் மாவட்டத்தில் உள்ள மதுரையான்காடு பகுதியில் சின்னத்தாய்(88) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சின்னத்தாயி சடலமாக கிடந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கிருஷ்ண பிரியா என்பவர் தனது மகனுடன் அவசர அவசரமாக பொருட்களை எடுத்துக் கொண்டு காரில் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. கணவரை இழந்த கிருஷ்ண பிரியா தனது மகனுடன் மூதாட்டியின் வீட்டிற்கு அருகே வசித்து வந்தார்.

சம்பவம் நடைபெற்ற அன்று மூதாட்டி கிருஷ்ண பிரியாவின் மகனிடம் தந்தை இல்லாததால் நன்றாக படித்து நல்ல நிலைமைக்கு வந்து தாய்க்கு உதவி செய்யுமாறு அறிவுரை கூறினார். இதனால் கோபமடைந்த சிறுவன் அரிவாளால் மூதாட்டியின் தலையை வெட்டிவிட்டு வீட்டிற்கு வந்து விட்டார். இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கிருஷ்ண பிரியா தனது மகனின் சட்டையில் ரத்தக்கரை இருந்ததை கண்டு விசாரித்தார். அப்போது மூதாட்டியை கொலை செய்து விட்டதாக சிறுவன் கூறியுள்ளான். இதனால் அவசர அவசரமாக இருவரும் காரில் உறவினர் வீட்டிற்கு தப்பி சென்றது தெரியவந்தது. போலீசார் சிறுவனையும், அவரது தாய் கிருஷ்ண பிரியாவையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.