சென்னை ஈ.சி.ஆரில் 4 இளம் பெண்கள் இரண்டு வாலிபர்கள் சென்ற காரை நான்கு பேர் கொண்ட இளைஞர்கள் காரில் துரத்தி சென்றனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் சந்துரு என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நேற்று சந்துரு சோழிங்கநல்லூர் குற்றவியல் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். சந்துரு மீது ஏற்கனவே கடத்தல் பண மோசடி ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் சந்துரு பிப்ரவரி 14-ம் தேதி வரை சிறையில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.