மத்திய பாஜக அரசு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என திமுக அரசு கூறிவரும் நிலையில் தமிழகத்தில் எப்போதும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கைதான் என தெளிவாக தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் தற்போது ஹிந்தியில் வாக்கு சேகரிப்பதற்காக போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் விசி சந்திரகுமார் போட்டியிடுகிறார். இந்த நிலையில் விசி சந்திரகுமார் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசும்போது, ஹிந்தியும் தமிழும் தான் எங்கள் உயிர் என கூறிவிட்டார். அதன் பிறகு சாரி, தவறாக சொல்லி விட்டேன். ஹிந்தியும், ஆங்கிலமும் தான் எங்கள் உயிர் என கூறினார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.