2015 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 2025 - 26ஆம் நிதியாண்டில் 6,81,210 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 6.22 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதாவது புதிய ஆயுதங்கள், விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் பிற இராணுவ தளவாடங்களை வாங்குவது உள்ளிட்ட மூலதனச் செலவினங்களுக்காக மொத்தம் 1,92,387 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தினசரி இயக்கச் செலவுகள் மற்றும் சம்பளங்களுக்காக 4,88,822 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 1,60,795 கோடி ரூபாய் ஓய்வூதியங்களுக்கு ஒதுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, விமானங்கள் மற்றும் விமான இயந்திரங்களுக்கு 48,614 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், கடற்படை கப்பல் கட்டுமானத்துக்கு, 24,390 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற உபகரணங்களுக்கு 63,099 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், திட்டமிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ராணுவத்துக்கான தொகை 1.91 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.