மும்பையில் இன்று பிசிசிஐ சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார். பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த 1994 ஆம் ஆண்டு அணியின் முதல் கேப்டன் சி கே நாயுடுவை கௌரவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டதாகும். இந்த விருதினை பெரும் 31-வது நபர் சச்சின் டெண்டுல்கர் ஆவார்.
இவர் இந்திய அணிக்காக 664 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் இந்த போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இந்நிலையில் 24 வருடங்கள் இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் செய்த சாதனைகளை பாராட்டி அவருக்கு மும்பையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை ஐசிசி தலைவர் ஜெயிஷா வழங்கி கௌரவித்தார்.