BUDGET 2025: அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 4 ஆண்டுகளாக உயர்வு…. மத்திய பட்ஜெட்டில் அதிரடி….!!
SeithiSolai Tamil February 02, 2025 04:48 AM

நாடே எதிர்பார்க்கும் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

அந்த வகையில் அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 2 ஆண்டுகளிலிருந்து 4 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.