மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில், ஜிபிஎஸ் எனப்படும் 'கிலான் பாரே சிண்ட்ரோம்' என்ற நோய் பரவி வருகிறது. மாசுபட்ட நீர் காரணமாக புனேவில் ஜிபிஎஸ் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இதுவரை 130 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிபிஎஸ் உடலில் உணர்வின்மை, தசை பலவீனம் மற்றும் உடல் பாகங்கள் செயலிழந்து, மரணத்திற்கு வழிவகுக்கிறது.
இந்த நிலையில், ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட 40 வயது பட்டய கணக்காளர் 26 ஆம் தேதி சோலாப்பூரில் இறந்தார். இதேபோல், புனேவில் 56 வயது பெண் ஒருவர் புதன்கிழமை ஜிபிஎஸ் நோயால் இறந்தார். இதற்கிடையில், 36 வயது டாக்ஸி ஓட்டுநரும் இந்த நோயால் இறந்துள்ளார். டாக்ஸி ஓட்டுநர் இந்த நோய் காரணமாக 21 ஆம் தேதி புனேவில் உள்ள யஷ்வந்த் ராவ் சவான் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
டாக்ஸி ஓட்டுநரின் மரணம் தொடர்பாக பிம்ப்ரி சின்ச்வாட் கார்ப்பரேஷன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஜி.எஸ்.பி. தொற்று நோயால் பாதிக்கப்பட்ட டாக்ஸி ஓட்டுநரின் மரணம் குறித்து மருத்துவமனையில் நிபுணர் குழு விசாரணை நடத்தியது. அப்போது அவருக்கு நிமோனியா இருப்பதும், கடுமையான சுவாசப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதும் தெரியவந்தது" என்று கூறப்பட்டது.