ஜப்பானில் ஓகோட்ஸ்க் கடற்பகுதி உள்ளது. இங்கு டுபோலேவ் 95 என்ற ரஷ்ய போர் விமானங்கள் பறந்தது. சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக அந்த விமானங்கள் வானில் வட்டமிட்டன. இதற்கு ஜப்பான் ராணுவம் கடும் கடனத்தை தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் இதே போன்று ரஷ்ய விமானங்கள் ஜப்பான் எல்லைக்குள் ஊடுருவி பெரும் அச்சத்தை எதிர்ப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனால் இரு நாடுகளின் உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.