சீமான் தேர்தல் பரப்புரையில் செருப்பை எடுத்துக்காட்டி ஈரோடு மக்களை அவமதித்துவிட்டதாக புகழேந்தி குற்றம் சாட்டியுள்ளார் .
அதிமுகவை ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வலியுறுத்தி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது, “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில சீமான் பேசிய போது என்னிடம் வெடிகுண்டு இருக்கிறது. வெடிகுண்டு எறிந்தால் அந்த இடத்தில் புல் பூண்டு கூட முளைக்காது. கொலைவெறியில் இருக்கிறேன் என்று சொல்கிறார்.
தேர்தல் பரப்புரையில் செருப்பை எடுத்துக்காட்டி ஈரோடு மக்களை அவமதிக்கிறார். மைக்கை நீட்டினால் குரங்கு டான்ஸ் ஆடுவது போல ஆடுகிறார். தந்தை பெரியாரை சீமானை விட புகழ்ந்தவர் யாருமே கிடையாது. திருமாவளவன் தான் சீமானுக்கு அரசியலையே கற்றுக் கொடுக்கிறார். ஆனால் தற்போது திருமாவளனையே சீமான் திட்டுகிறார் பிரபாகரன் தான் சீமானுக்கு அரசியல் சொல்லி க் கொடுத்ததாக சொல்கிறார்கள்.
பிரபாகரனுக்கு வேறு வேலை இல்லையா இப்படிப்பட்ட ஆட்களை வளரவிட்டால் தமிழ் நாட்டிற்கு தான் தீமை. தேர்தல் தோல்வி பயத்தால் எடப்பாடி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் புறக்கணித்து விட்டார். பாஜக தவிர அனைத்து கட்சிகளுமே சீமானின் பேச்சுக்கு எதிர்ப்புதான் தெரிவிக்கிறது. எல்லோருடைய எதிர்ப்பையும் மீறி எதிர்நீச்சல் போடவில்லை. சாக்கடையில் புரண்டு வருகிறார். தேர்தல் பரப்புரையில் சீமானின் பேச்சு மீது தேர்தல் நடத்தை விதிப்படி கட்சியை தடை செய்ய வலியுறுத்தி புகார் அளித்துள்ளேன். நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.