பொதுவாக மணமக்கள் திருமணத்திற்கு முன்பு தங்களை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு விஷயங்களை செய்வார்கள். அடுத்தவர்கள் பிரமிக்கும் அளவிற்கு அழகாக இருக்க வேண்டுமென உடை, நகை அனைத்தையும் பார்த்து பார்த்து வாங்குவார்கள். ஆனால் இங்கு மணப்பெண் ஒருவர் தனது வழுக்கை தலையுடன் திருமணம் செய்து கொண்டுள்ள வீடியோ இணையவாசிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது.
”முடிதான் பெண்களுக்கு அழகு” என்ற வாக்கியத்தை தகர்த்தெறிந்தும் வகையில் வழுக்கை தோற்றத்தில் வந்து திருமணம் செய்து கொண்டதற்கான காரணம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நீஹர் சச்தேவ் என்ற பெண் தான் வழுக்கை தலையுடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு அலோபீசியா அரேட்டா என்ற குறைபாடு உள்ளது. இந்த குறைபாடு இருந்தால் உடலின் சில அல்லது அனைத்து பகுதியிலிருந்தும் முடி உதிர்தல் ஏற்படுமாம். இதனை ஸ்பாட் வழுக்கை என்றும் அழைக்கின்றனர்.
திருமணத்தின் போது நீஹர் தனது வழுக்கையை மறைக்க விக் பயன்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் அதே தலையுடன் திருமணம் செய்துக்கொண்டதுதான் இணையவாசிகளை பெரிதும் ஈர்த்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பலரையும் நெகிழ செய்துள்ளது.
அலோபீசியா அரேட்டா பற்றிய சில தகவல்கள்
இந்த குறைபாடு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்
இது பரம்பரை நோயாகவும் இருக்கலாம்
இது தொற்றக்கூடியதல்ல
இதற்கு மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.