விஜயகாந்த்கிட்ட டிரெஸ் கடன் வாங்கி போட்ட ரஜினி!.. இப்படியெல்லாம் நடந்திருக்கா!....
CineReporters Tamil February 05, 2025 06:48 AM

Vijayakanth: விஜயகாந்த் சினிமாவில் நடிக்க வரும்போது ரஜினி சூப்பர்ஸ்டாராக இருந்தார். அதாவது ரஜினி ஸ்டாராக இருக்கும்போதே விஜயகாந்த் ஒரு அறிமுக நடிகராக இருந்தார். ரஜினி பல கருப்பு வெள்ளை படங்களில் நடித்திருந்தார். விஜயகாந்த் சினிமாவுக்கு வரும்போது எல்லாம் கலர் படங்களாக இருந்தது.

விஜயகாந்தை விட ரஜினி வயதிலும் பெரியவர். ரஜினிக்கும், விஜயகாந்துக்கும் இடையே நல்ல நட்பும், மரியாதையும் உண்டு. எங்கு சந்தித்திக்கொண்டாலும் இருவரும் பரஸ்பரம் அன்பை பரிமாறிக்கொள்வார்கள். விஜயகாந்தின் படங்களை பார்த்துவிட்டு உடனே ரஜினி பாராட்டுவார். விஜயகாந்தின் சின்னக் கவுண்டர் படத்தை பார்த்துவிட்டுதான் அதுபோல நாமும் படம் முழுக்க வேஷ்டி சட்டை அணிந்து நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார் ரஜினி.

உடனே ஆர்.வி.உதயகுமாரை அழைத்து பேசி உருவான திரைப்படம்தான் எஜமான். ஆனால், சின்னக் கவுண்டர் வசூலை எஜமான் தாண்டவில்லை. பலமுறை ரஜினி படத்தோடு வெளியான விஜயகாந்த் படம் அதிக வசூலை பெற்றிருக்கிறது. விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்த போது கூட ரஜினி நேரில் போய் அவரை பார்த்தார்.


விஜயகாந்த மரணமடைந்தபோது படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு உடனே சென்னை வந்து நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அதுதான் விஜயகாந்த் மீது ரஜினி வைத்திருந்த மரியாதை. இந்நிலையில், விஜயகாந்துடன் நெருங்கி பழகியவரும், தயாரிப்பாளருமான டி.சிவா ஊடகம் ஒன்றில் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார்.

நடிகர் சங்க கடனை அடைப்பதற்காக 2000ம் வருடம் விஜயகாந்த் சார் தலைமையில் மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தினோம். அதை முடித்துவிட்டு சிங்கப்பூருக்கு சென்றோம். மாறி மாறி சென்றதில் ரஜினி சார் வைத்திருந்த சூட்கேஸ் எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்கமுடியவில்லை. அதில் 4 வேஷ்டி, சட்டைகளை வைத்திருந்தார். அவரிடம் வேறு டிரெஸ் இல்லை.

சரத்குமார் சார் கோட் சூட் கொடுத்து ரஜினி சாரை போட சொன்னார். ஆனால், அதை ரஜினி சார் அதை வேண்டாம் என சொல்லிவிட்டார். எங்களுக்கோ பதட்டமாகிவிட்டது. ஆனால், ரஜினி சார் கூலாக ‘விஜயகாந்திடம் வேஷ்டி சட்டை இருக்கும் அதில் ஒரு செட் வாங்கிட்டு வாங்க’ என்றார். அது ரஜினி சாருக்கு தொளதொளவென இருந்தது. ஆனாலும் அதை அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் நினைத்தால் தங்கத்தில் ஆடை வாங்கி அணிய முடியும். ஆனால், அவரோ மிகவும் எளிமையாக இருந்தார்’ என சொல்லி இருக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.