சிரியாவின் வடக்கு நகரமான புறநகர் பகுதியில் மன்பீஜ் நகரில் விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று சென்றுள்ளது. அப்போது அந்த வாகனத்தின் அருகே சென்ற கார் திடீரென வெடித்து சிதறியது. இதில் 1 ஆண் மற்றும் 14 பெண்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும் 15 பெண்கள் காயமடைந்துள்ளனர் என சிரியா சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
சிரியாவின் அதிபர் ஆசாத் ஆட்சி கிளர்ச்சியாளர்களால் கவிழ்க்கப்பட்டது முதலே சிரியாவின் பல பகுதிகளில் தாக்குதல் நடைபெற்று வருகிறது. சிரியாவின் தேசிய இராணுவம் என கூறப்படும் துருக்கி ஆதரவு பிரிவுகள், அமெரிக்கா ஆதரவு உடைய குர்திஸ் இனத்தவர் தலைமையிலான படைகள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து சவுதி அரேபியா இளவரசரை, சிரியாவின் இடைக்கால அரசர் அஹமத் அல்- ஷாரா சந்தித்து இரு நாடுகளின் உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.