மதுரை: காவலர் கொலை வழக்கில் திருப்பம்.. மைத்துனரின் பதறவைக்கும் செயல்.. விலகிய மர்மம்.!
Tamilspark Tamil February 05, 2025 07:48 AM
என் தங்கை இறந்துவிட்டாள். அந்த துயரம் இன்றி திருமணம் செய்து புதிய வாழ்க்கையில் இருக்கிறாயா? என ஆதங்கப்பட்டு நபரால் அரங்கேற்றப்பட்ட கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் சிவா. இவரின் மனைவி பொன்மணி. தம்பதிகளுக்கு மகன் இருக்கின்றனர். சிவா நாகையாபுரம் காவல் நியதில், காவலராக வேலை பார்த்து வருகிறார். தினம் மதுபோதையில் வீட்டிற்கு வரும் சிவா, பொன்மணியை அடித்து துன்புறுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க:

பெண் தற்கொலை

இதனால் ஒருகட்டத்தில் உச்சகட்ட மனவேதனை அடைந்த பொன்மணி, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கணவரின் சந்தேக எண்ணம் தாளாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார். மகளின் இறப்பு பொன்மணியின் பெற்றோருக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இரண்டாவது திருமணம்

பொன்மணியின் மறைவுக்கு பின்னர், தம்பதியின் 5 வயது மகனை, பொன்மணியின் பெற்றோர் தங்களின் பராமரிப்பில் வளர்க்க அழைத்து சென்றுவிட்டனர். மனைவி உயிரிழந்த துக்கம் இல்லாத சிவா, சில மாதங்களுக்கு முன்பு ரஞ்சிதா என்ற இரண்டாவது பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். மேலும், முதல் மனைவியின் பெற்றோர் பராமரிப்பில் இருந்த சிறுவனையும், சண்டையிட்டு தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.

ஆத்திரத்தில் வெறிச்செயல்

இதனால் ஆவேசமான பொன்மணியின் சகோதரர் அர்ஜுனன், சம்பவத்தன்று இரண்டாவது மனைவியுடன் திருமண விழாவிற்கு வந்த சிவாவை நேரில் பார்த்துள்ளார். உச்சகட்ட ஆவேசத்திற்கு சென்ற அர்ஜுனன், தங்கை பலியான துக்கம் இல்லை, அவளின் குழந்தையையும் எடுத்துக்கொண்டான், இப்போது மனைவியுடன் கொண்டாட்ட பயணமா? என ஆதங்கப்பட்டுள்ளார்.

பின் மனைவியுடன் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த சிவாவை நோட்டமிட்டு, நடுவழியில் இடைமறித்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அர்ஜுனனை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.