மூலநோயால் அவதிப்படுகிறீர்களா? - இதைமட்டும் செய்யுங்கள்.!
Seithipunal Tamil February 05, 2025 10:48 AM

மனிதர்களுக்கு அதிகளவில் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று மூல நோய். இதனால் பாதிக்கப்படுபவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அதனை சரி செய்கின்றனர். இந்த நிலையில், உணவுப்பழக்கத்தின் மூலம் மூலநோயை சரி செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.

* துத்திக் கீரையுடன், சின்ன வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசியவைத்து சாப்பிட்டுவர வேண்டும்.

* கருணைக் கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி, புளி சேர்த்து குழம்பாக வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும்.

* பிரண்டைத் தண்டை துவையல் செய்து சாப்பிடலாம்.

* முள்ளங்கி, வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பீன்ஸ், கீரைகள், கோவைக்காய் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

* கிழங்கு வகைகள், காரமான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

* உடல்சூடு குறைய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

* தினமும் 6-7 மணிநேரம் தொடர்ச்சியாக தூங்க வேண்டும்.

* வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும்.

* இளநீர், தர்பூசணி சாறு, முலாம் பழச்சாறு, மோர், நார்ச்சத்து நிறைந்த ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யாப் பழம் மற்றும் வாழைப்பழம் உண்ண வேண்டும்.

* காலையில் நடைப்பயிற்சி, ஆசனவாய் தசைகளை உறுதிபடுத்தும் பயிற்சிகள் செய்ய வேண்டும். நேரம் தவறாமல், சரியான முறையில் உணவு உண்ண வேண்டும்.

* சீரகம், கொத்தமல்லி, ஓமம் இவைகளை சிறிதளவு எடுத்து கொதிக்க வைத்த தண்ணீரை காலை, இரவு குடித்து வர வேண்டும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.