நீங்கள் 50,000 சம்பாதிக்கிறீங்களா ? எந்த வருமான வரி முறையை தேர்வு செய்ய வேண்டும் தெரியுமா ?
Newstm Tamil February 05, 2025 01:48 PM

உங்களின் வருமானம் மாதம் 50 ஆயிரம் என்று வைத்துக்கொள்வோம்.. நீங்கள் எந்த வருமான வரி முறையை தேர்வு செய்ய வேண்டும்? எது சிறந்தது? என்று இங்கே பார்க்கலாம்.

நீங்கள் புதிய முறையை தேர்வு செய்கிறீர்கள் என்றால்.. 12 லட்சத்திற்கு கீழ்தான் மேற்கண்ட கணக்குப்படி உங்களுக்கு சம்பளம். அப்படி இருக்க நீங்கள் வரி கட்ட வேண்டியதே இல்லை. நீங்கள் எந்த வரியும் கட்டாமல் மேற்கண்ட முறையை பயன்படுத்தி பலன் அடையாளம்.

ஆனால் எனக்கு புதிய முறை வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால்.. ஒரே ஒரு காரணம் மட்டுமே உங்களிடம் இருக்க வேண்டும். அது முதலீடு அல்லது வீட்டு லோன். அதாவது நீங்கள் நிறைய முதலீடு செய்து இருந்தால், வீட்டு லோன் எடுத்து இருந்தால்.. பழைய முறையை பயன்படுத்திக் கொள்ளலாம். இதிலும் நீங்கள் முழுக்க முழுக்க சலுகைகளை பெற்று.. எந்த வரியும் கட்டாமல் தவிர்க்க முடியும்.

உங்களுடைய வருமானம் வருடத்திற்கு 12 லட்சத்திற்கு கீழ் இருந்தால் போதும் நீங்கள் எப்படியும் வரி செலுத்தாமல் தவிர்க்க முடியும். அதே சமயம் உங்களுக்கு முதலீடுகள் அதிகம் உள்ள பட்சத்தில்.. வருமானமும் மாதத்திற்கு 1 லட்சத்திற்கு மேல் இருந்தால் புதிய வருமான வரிக்கு பதிலாக பழைய முறையை பின்பற்றலாம்.

இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும். 10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

புதிய முறை:

அதுவே உங்களுக்கு பெரிய அளவில் முதலீடுகள் இல்லை. அதேபோல் வருமானமும் வருடம் 12 லட்சம் என்றால் புதிய முறையே பெஸ்ட்.

புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. நீங்கள் இந்த முறையை தேர்வு செய்துள்ளீர்கள். இப்போது உங்கள் மாத வருமானம் ரூ. 1 லட்சம் என்றால்.. வருட வருமானம் 12 லட்சம். புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 12 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது பின்வரும் ஸ்லாப் நடைமுறை ஆகும்.

0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை

4-8 இலட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்

8-12 லட்சம் ரூபாய் 10 சதவீதம் வரி விதிக்கப்படும்

12-16 இலட்சம் ரூபா 15 சதவீதம் வரி விதிக்கப்படும்

16-20 லட்சம் ரூபாய் 20 சதவீதம் வரி விதிக்கப்படும்

20-24 இலட்சம் ரூபா 25 சதவீதம் வரி விதிக்கப்படும்

24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்

புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதனால் இதை அப்படியே கட்ட வேண்டி இருக்கும்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.