திமுகவை வீழத்துவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்று டிடிவி தினகரன்கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு டிடிவி தினகரன் மாலை அணிவித்து விட்டு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் ஒரு ஏடிஜிபியே புகார் கொடுக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கின் நிலை இருக்கிறது.
திமுகவை வீழ்த்துவதற்கு அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் கட்சிகளின் தலைவர்கள் முதலமைச்சர் பதவி முக்கியமா? அல்லது திமுகவை விரட்டுவது முக்கியமா? என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.