தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் தற்போது மாவட்ட செயலாளர்கள் உட்பட கட்சியில் நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த ஆதவ் அர்ஜூனா மற்றும் அதிமுகவை சேர்ந்த நிர்மல் குமார் ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் தாடி பாலாஜி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில் நடிகர் விஜயின் உருவத்தை கூட நெஞ்சில் பச்சை குத்தி வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் நடிகர் தாடி பாலாஜி வைத்துள்ள whatsapp ஸ்டேட்டஸ் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இருக்கும் போட்டோவையும் தாடி பாலாஜி விஜய் போட்டோவை நெஞ்சில் பச்சை குத்திய போட்டோவையும் அவர் வெளியிட்டு அவளோ அவளுடைய புது பாய் பிரண்டுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார். தற்குறி நானும் அவளின் நினைவோடு என்று பதிவிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் தனக்கு பதவி வழங்கப்படாத அதிருப்தியில் தான் தாடி பாலாஜி இப்படி ஒரு whatsapp ஸ்டேட்டஸ் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தமிழக வெற்றிக் கழகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.