கும்பமேளாவில் பூடான் மன்னர் புனித நீராடல்!
Dinamaalai February 05, 2025 01:48 PM

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஜனவரி  13ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 26ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.  இந்நிலையில், பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக்  நேற்று  புனித நீராடினார்.

புனித நீராடுவதற்கு முன்பு சூரியனுக்கு 'அர்க்யா' சமர்ப்பித்தல் போன்ற சடங்குகளை செய்துள்ளார்.  அவருடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சர்கள்  சுதந்திர தேவ் சிங் மற்றும் நந்த கோபால் குப்தா ஆகியோரும் புனித நீராடியுள்ளனர்.


நேற்று முன்தினம் பூடான் நாட்டிலிருந்து பூடான் நாட்டிலிருந்து லக்னோ விமான நிலையத்துக்கு வருகை தந்த பூடான் அரசர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக்கை உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மலர் கொத்து வழங்கி வரவேற்றுள்ளார்.  பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் பூடான் அரசருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.