இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் தலைமைப் பயிற்சி யாளர் ராகுல் டிராவிட். இவர் பெங்களூருவில் தன்னுடைய SUV காரில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய காரின் பின்பகுதியில் சரக்கு ஆட்டோ ஒன்று வேகமாக வந்து மோதியது.
இதனால் கீழே இறங்கி வந்த ராகுல் டிராவிட் அந்த சரக்கு ஆட்டோ ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.