வெளியான குட் நியூஸ்..! மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி எவ்வளவு சம்பளம் வழங்கப்படும்..!
Newstm Tamil February 05, 2025 01:48 PM

2016 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்த 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பின்பற்றி தற்போது சம்பள அமைப்பு, ஓய்வூதிய அமைப்பு நடைமுறையில் உள்ளது. 8வது ஊதியக் குழுவின் உருவாக்கத்துடன் சம்பள அமைப்பு முற்றிலுமாக மாற்றி அமைக்கப்படும்.

8வது ஊதியக்குழுவின் சம்பள உயர்வின் சரியான சதவீதம் வெளியிடப்படவில்லை என்றாலும் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் பிட்மென்ட் காரணியின் மதிப்பு வெளியாகி உள்ளது. இந்த பிட்மென்ட் காரணி 2.57ல் இருந்து 2.86 ஆக உயரக்கூடும் என்று தகவல் உள்ளது.

இது நடந்தால், அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளம், 18,000 ரூபாயில் இருந்து, 51,480 ரூபாயாக உயரும். 7வது ஊதியக் குழுவின் கீழ், பிட்மென்ட் காரணி 2.57 ஆக இருப்பதால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 6வது ஊதியக் குழுவின் கீழ் ரூ.7,000லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. 7வது ஊதியக் குழுவின் கீழ் மொத்த குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.36,020 ஆக உயர்ந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் 8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் உயரும் என தகவல் வெளியாகி உள்ளது.

எவ்வளவு உயரும்:

பியூன்கள், அட்டென்டர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் இந்த வகையின் கீழ் வருகிறார்கள். இவர்களின் அடிப்படை ஊதியம், முன்பு ரூ.18,000 ஆக இருந்தது.. இனி ரூ.51,480 ஆக மாற்றியமைக்கப்படும், இவர்களின் சம்பளம் ரூ.33,480 அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கீழ் லெவல் கிளார்க் இந்த பதவியின் கீழ் வருவார்கள். இவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.19,900ல் இருந்து ரூ.56,914 ஆக உயர்த்தப்படும். அதாவது இவர்களுக்கு ரூ.37,014 சம்பள உயர்வு ஏற்படும்.

காவல்துறை கான்ஸ்டபிள்கள் இந்த பிரிவின் கீழ் வருகிறார்கள். இவர்களுக்கு ரூ.21,700 ஆக இருந்த அடிப்படை ஊதியம் ரூ.62,062 ஆக உயர்த்தப்படும். அதாவது ரூ.40,362 சம்பளம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரேடு D ஸ்டெனோகிராபர்கள் மற்றும் ஜூனியர் கிளார்க்குகள் இந்த வகைக்கு கீழ் வருவார்கள். அவர்களின் அடிப்படை ஊதியம் முன்பு ரூ.25,500. இதில் ரூ. 47,430 உயர்வு செய்யப்பட்டு ரூ.72,930 ஆக சம்பளம் மாற்றியமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூத்த கிளார்க்குகள் மற்றும் உயர்மட்ட தொழில்நுட்ப பணியாளர்கள் இந்த பிரிவின் கீழ் வருவார்கள்.. இவர்களின் அடிப்படை சம்பளம் ரூ.29,200 ஆக இருந்தது ரூ.83,512 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது ரூ.54,312 சம்பள உயர்வு ஏற்படும்.

இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் இந்த நிலைக்கு கீழ் வருவார்கள். அவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.35,400ல் இருந்து ரூ.1,01,244 ஆக உயரும். அதாவது ₹65,844 சம்பள உயர்வு ஏற்படும்..

இந்த பிரிவில் கண்காணிப்பாளர்கள், பிரிவு அலுவலர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் உள்ளனர். அவர்களின் தற்போதைய அடிப்படை ஊதியமான ₹44,900ல் இருந்து 83,514 ருபாய் அதிகரிக்கும். அதன்படி புதிய சம்பளம் ரூ.1,28,414 ஆக மாற்றியமைக்கப்படும்..

மூத்த பிரிவு அதிகாரிகள் மற்றும் உதவி தணிக்கை அதிகாரிகள் இந்த பிரிவின் கீழ் உள்ளனர். இவர்களின் அடிப்படை ஊதியம் தற்போது ரூ.47,600ல் இருந்து ரூ.88,536 அதிகரித்து ரூ.1,36,136 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. அடுத்த நிலையில் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் கணக்கு அலுவலர்கள் உள்ளனர். அவர்களின் தற்போதைய அடிப்படை ஊதியமான ரூ.53,100.. விரைவில் ரூ.1,51,866 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.98,766 சம்பள உயர்வு அவர்களுக்கு கிடைக்கும். சிவில் சேவைகளில் நுழைவு நிலை அதிகாரிகள் உட்பட குரூப் ஏ அதிகாரிகள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். தற்போது ரூ.56,100 ஆக உள்ள அவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.1,60,446 ஆக மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.