சமூகவலைத்தளங்களில் வைரலாக காணொளி ஒன்று அதிமுக ஐடி விங்க் தனது பக்கத்தில் பகிர்ந்து தமிழக முதல்வருக்கு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளது.
அதில், "நாங்க என்ன சும்மாவா கள்ளச்சாராயம் விக்குறோம்..
போலீசுக்கு பணம் கொடுத்துட்டு தான விக்குறோம்.
விக்குறது அனுதாபி இல்லையாம் முக ஸ்டாலின் அவர்களே, உங்க கட்சி பிரமுகர் தானாம்..
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளை பார்த்த பின்பும், கள்ளசாராயத்தை கட்டுபடுத்த தவறிய இந்த ஸ்டாலின் மாடல் அரசை என்னவென்று சொல்வது?
இதுதான் நீங்கள் சொன்ன விடியலா?" என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதன் மற்றும் ஒரு பதிவில், தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்தது போல, சட்டம் ஒழுங்கை காக்க சர்வாதிகாரியாக மாறுவேன் என வசனம் பேசியதையும் விடியா முதல்வர் அவர்கள், மறந்து விட்டாரா?
தமிழ்நாட்டில் கொலை,கொள்ளை,பாலியல் வன்கொடுமை போன்ற குற்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் எங்கே அந்த இரும்புக்கரம்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.