பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்
Vikatan February 05, 2025 03:48 AM
பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்.

சென்னையில் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட பிரச்னைகளால் சிகிச்சைப் பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்திருக்கிறார். இவருக்கு வயது 87.

எம்.ஜி. ஆர், சிவாஜி போன்ற தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் பணியாற்றியவர் புஷ்பலதா. தமிழில் 1961-ம் ஆண்டு வெளியான 'செங்கோட்டை சிங்கம்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவும், துணை கதாபாத்திரங்களிலும் 100 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தவர் புஷ்பலதா. இவர் நடிகர் ஏ.வி.எம் ராஜனின் மனைவி என்பது குறிப்பிடதக்கது.

Pushpalatha

`சாரதா', 'பார் மகளே பார்' போன்ற படைப்புகள் இவர் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்தன. இவர் கடைசியாக முரளி நடிப்பில் 1999-ம் ஆண்டு வெளியான 'பூ வாசம்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நடிப்பின் பக்கம் இவர் வரவில்லை. புஷ்பலதாவின் மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.