அமெரிக்காவில் கடந்த மாதம் இரண்டாவதாக அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் வர்த்தகம் மீதான அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சட்ட விரோத குடியேறிகள் மற்றும் போதைப் பொருட்களை காரணமாக கூறி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25% வரி விதிப்பு அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சீனாவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கும் 10 % வரிவிதிப்பு அளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகள் தனியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் இன் அறிவிப்புக்கு சீனாவும், மெக்சிகோவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கனடா அமெரிக்க பொருள்களுக்கு 25% வரிவிதிப்பு அளித்துள்ளது. . டிரம்பின் அடுத்தடுத்த அதிரடி முடிவுகளால் வர்த்தக போர் ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில்,”அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வர்த்தக விதிமுறைகளை மீறுவதாகும். அமெரிக்காவின் இந்த முடிவு இரண்டு நாடுகளுக்கு இடையே ஆன ஒத்துழைப்பு மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமைகிறது. அமெரிக்கா தனது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் உலக வர்த்தகக் கூட்டமைப்பில் இது தொடர்பாக வழக்கு தொடர ப்படும்” என சீனா எச்சரித்துள்ளது.