பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டும்..பாதுகாப்பு படைகளுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்!
Seithipunal Tamil February 06, 2025 09:48 AM

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த பாதுகாப்பு படைகளுக்கு அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.மேலும் பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்பதே நமது லட்சியாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

ஜம்மு காஷ்மீர் எல்லை பாதுகாப்பு தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா , எல்லைகளில் ஊடுருவல் இல்லாத நிலையை எட்ட வேண்டும் என்றும் , ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும் பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்பதே நமது லட்சியாக இருக்க வேண்டும் என்று  குறிப்பிட்ட அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணம் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், இதற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.