எங்கள விட்டு போயிட்டிங்களே…! காதல் தம்பதியின் உடலை பார்த்து கதறிய உறவினர்கள்…. பரிதவிக்கும் பிள்ளைகள்…!!
SeithiSolai Tamil February 06, 2025 12:48 PM

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் கோம்பை சாலையில் மனோஜ்(31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு மனோஜ் அதே பகுதியை சேர்ந்த தீபிகா(30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலில் இருந்த தம்பதியினர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மனோஜையும், தீபிகாவையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.