திருச்சி மாவட்டத்தில் உள்ள திருபெரும்பூரில் சதீஷ் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவரம்பூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரகு என்பவர் தனது சொந்த ஊர் கேரளா எனவும், சென்னையில் வசிப்பதாகவும் அறிமுகம் செய்து கொண்டார். மேலும் தனக்கு மாந்திரீகம் தெரியும் என்பதால் பூஜைகள் செய்து உங்களை கோடீஸ்வரன் ஆக்குகிறேன் என ஆசை வார்த்தைகள் கூறினார். அதோடு வருகிற தேர்தலில் கவுன்சிலராக வெற்றி பெற வைக்க முடியும் என ஆசை வார்த்தைகள் கூறி யூடியூப் சேனலில் மாந்திரீகம் தொடர்பான வீடியோக்களை அனுப்பி சதீஷை நம்ப வைத்து முன்பணமாக 3000 ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார்.
இதனையடுத்து கோவிலில் பூஜை செய்துவிட்டு வருவதாக கூறி விட்டு ரகு அங்கிருந்து சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகிக்கும் அவர் திரும்பி வராததால் சதீஷ் அவரைத் தேடி சென்றார். அப்போது திருவெறும்பூர் மலைக்கோவில் பகுதியில் ரகு வேறொரு நபரிடம் இதே போல் கூறிக் கொண்டிருந்தார். இது குறித்து சதீஷ் கேட்டபோது சரியாக பதில் அளிக்காமல் எனக்கு மாந்திரீகம் தெரியும் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் தான் மாற்றப்பட்டதை அறிந்த சதீஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரகுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.