ஞானசேகரனுக்கு இன்று குரல் பரிசோதனை!
Top Tamil News February 06, 2025 04:48 PM

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு இன்று குரல் பரிசோதனை செய்யப்படவுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யபட்டு சிறையில் உள்ளார். இந்த சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் தொடர்புடையதாகவும், பாதிக்கப்பட்ட மாணவி சார் என யாரிடமோ பேசியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு இன்று குரல் பரிசோதனை செய்யப்படவுள்ளது. குரல் பரிசோதனை முடிந்த பின் அவரை மீண்டும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர். நீதிமன்ற அனுமதியுடன் நாளை அல்லது நாளை மறுநாள் ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை நடத்தப்படும் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.